• Sep 07 2026

முதல் நாளே வெடித்த சண்டை.. கடும் கோபத்துடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய முனியம்மா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்த சீசனில் மொத்தம் 19 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். சாதிகா, லக்‌ஷ்மி பிரியா, பிரித்விநாத், ஜான்சன், ஜாவித், முனியம்மா, முத்தழகி, ஷாமா, அஸ்மிதா, ப்ளாக் பாண்டி, அவிநாஷ், கேபிஒய் வினோத், சாவின்யா, குமரன், சாந்தினி, ராகவ், முகேஷ், தன்யா மற்றும் அன்சர் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.


நிகழ்ச்சி தொடங்கிய உடனேயே போட்டிகளும் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளன. அதன்படி கேப்டன் போட்டியில் சாத்விகா வெற்றி பெற்று முதல் வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து வெளியான 2-வது மற்றும் 3-வது புரோமோக்களில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஜனநாயக அறை’ தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேப்டனைத் தவிர மற்ற போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விவாதிக்க வேண்டும் என பிக்பாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது கேப்டன் சாத்விகாவுக்கும் போட்டியாளர் முனியம்மாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், முனியம்மா அந்த அறையில் இருந்து வெளியேறுவதாக கூறி நடந்து செல்கிறார். முதல் நாளிலேயே வெடித்துள்ள இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பிக்பாஸ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கவைத்துள்ளது.

Advertisement

Advertisement