தனுஷ் – மம்முட்டி கூட்டணியில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், இதுவரை ‘தனுஷ் 55’ என்ற தற்காலிக தலைப்பில் அழைக்கப்பட்டு வந்தது.
ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பாலிவுட்டின் பிரபல நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழில் நடிப்பது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘ஓம்’ படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சாய் அபயங்கர் இசையமைத்துள்ள படத்தின் தீம் மியூசிக்கும் கவனம் ஈர்த்துள்ளது. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அலாக்கா லோவா’ என்ற முதல் பாடலும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மம்முட்டியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புதிய கிளிம்ப்ஸ் வீடியோவில், அவர் ‘பர்மா கார்த்திகேயன்’ என்ற கடத்தல்காரர் கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ‘ஓம்’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் தனுஷ்–மம்முட்டி கூட்டணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
It's time to introduce you to, Burma Karthikeyan🔥
— Wunderbar Films (@wunderbarfilms) September 7, 2026
Siya Entry from #OM ▶️ https://t.co/CEAgFT23LQ
Special birthday wishes to the one and only @mammukka ❤️
A @SaiAbhyankkar Musical. @dhanushkraja @Rajkumar_KP @RTakeStudios @wunderbarfilms @Sai_Pallavi92 #NaseeruddinShah… pic.twitter.com/LIPLaMl6RR
Listen News!