ரவிமோகன் மற்றும் பாடகி கெனிஷா தொடர்பான சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இருவரும் கோவாவில் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ரவிமோகனை விட்டு பிரிந்துவிட்டதாக கெனிஷா தெரிவித்ததாகவும், இதையடுத்து அவர் சென்னையை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால் இருவருக்கும் இடையேயான உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வைரலாகி வரும் வீடியோவில் ரவிமோகன் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க, அவரிடமிருந்து கெனிஷா சிகரெட்டை வாங்கி புகைப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள், இருவரும் உண்மையில் பிரிந்துவிட்டார்களா அல்லது தங்களது உறவு குறித்து வெளியாகும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இவ்வாறு கூறினார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே ரவிமோகன் தற்போது ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்திற்கு முதலில் ‘ஹைட்ரோ’ இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கெனிஷாவை இசையமைப்பாளராக மாற்ற ரவிமோகன் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவல் உண்மையா என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Listen News!