• Dec 04 2024

சாச்சனாவ ஏன் சேவ் பண்ணீங்க? சிவகுமாரின் மனைவி கிளப்பிய சர்ச்சை! வைரலாகும் போஸ்ட்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ளது. இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை கடும்  விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. ஆரம்பத்தில் விஜய் சேதுபதிக்கு அமோக வரவேற்பு காணப்பட்ட போதிலும் அதனை அவர் தவிடு பொடியாக்கும் விதமாக ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகின்றார்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் மற்றும் சிவகுமார் ஆகிய ஆறு  பேரும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இவர்களுள் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா தியாகராஜன் இறுதியாக சிவகுமாரும் இதிலிருந்து எலிமினேட்டாகி வெளியே சென்று இருந்தார்கள்.

d_i_a

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இறுதியாக எலிமினேட் ஆகி வெளியே சென்ற சிவகுமாரின் மனைவி தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்ட ஸ்டோரி ஒன்று வைரலாகி வருகின்றது.


அதன்படி அதில் அவர் கூறுகையில், ஆறாவது இடத்தில் இருந்த சிவகுமார் எலிமினேஷன் ஆனார். ஆனால் கடைசி நிலையில் இருந்த சாச்சனா மட்டும் சேவ் ஆனார். அது எப்படி என்ற வகையிலேயே அவர் மறைமுகமாக கேள்வி எழுப்பி குறித்த போஸ்டை ஷேர் பண்ணி உள்ளார்.


மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக சாச்சனா நடித்திருப்பார். பிக் பாஸ் வீட்டிலும்  சாச்சனாவை விஜய் சேதுபதி காப்பாற்றி வருவதாக பல விமர்சனங்கள் இருந்தது. மேலும் அவரை இறுதிவரை கூட்டி சென்று டைட்டில் கொடுத்தாலும் கொடுப்பார் விஜய் சேதுபதி என்று பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையிலே சிவகுமாரின் மனைவி இறுதி நிலையில் இருந்த சாச்சனா எலிமினேட் ஆகாமல் ஆறாவது இடத்தில் இருந்த சிவகுமார் மட்டும் எப்படி எலிமினேட் ஆனார் என்று தனது சந்தேகத்தை முன் வைத்துள்ளார். தற்போது இது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement