தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மிர்ச்சி சிவா நடிகர் மட்டுமன்றி டயலாக் ரைட்டராகவும் இருந்துள்ளார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஆர்ஜேவாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு தான் சினிமாவில் கால் பதித்தார். இப்போது வருடத்திற்கு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக சிவா நடிப்பில் காசேதான் கடவுளடா என்ற படம் வெளியானது. பார்ட்டி படம் இன்னும் வெளிவரவில்லை. இப்போது சூது கவ்வும் 2 ,நாடும் நாட்டு மக்களும் என்ற படத்தில் நடித்துள்ளார்.தற்போது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் தான் பிஎம்டபிள்யூ கார் பற்றி பேசியுள்ளார்.
நான் BMW கார் வச்சிருந்தேன். யுவன் சங்கர் ராஜா இருக்காருல அவர் தான் இந்த கடைல வாங்கிக்கோ என்று கடை பற்றி சொன்னாரு. இந்த காருக்கு நீங்கள் தான் தகுதியானவர் என்று அந்த காரை கொடுத்தார். ஆனால், அந்த கார் வெள்ளம் வந்த போது அந்த வெள்ளத்துல போயிருச்சு.
அப்போது நான் சிரிச்சிக்கிட்டே இருந்தேன். இயற்கை தான் எனக்கு அந்த காரை கொடுத்தது. நடிச்சு, சம்பாதிச்சு அதன் மூலமாக அந்த காரை வாங்குனேன். இப்போது அந்த இயற்கையே அந்த காரை எடுத்து சென்றுவிட்டது. அதில் லாஸ் என்றும் எதுவும் இல்லை என்று காமெடியாக கூறியுள்ளார்.
Listen News!