• Jan 19 2025

சம்மந்தமே இல்லாதவங்கள சந்தித்த ‘மஞ்சுமல் பாய்ஸ்’ இளையராஜாவை ஏன் சந்திக்கலை.. ஒருவேளை இதுதான் காரணமோ?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் மலையாளத்தில் வெளியானமஞ்சுமல் பாய்ஸ்என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் கேரளாவை விட தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் கேரள வசூலை விட தமிழக வசூல் தான் அதிகமாக உள்ளது என்றும் மொத்தத்தில் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் குழுவினர் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தான் சுற்றி வருகின்றனர் என்பதும் தமிழக திரை உலக பிரபலங்களை நேரில் சந்தித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது. முதலில் கமல்ஹாசனின் சந்தித்த அவர்கள் சில மணி நேரம் இந்த படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதும் கமல்ஹாசனும்குணாபடம் எடுக்கும்போது நடந்த சில வித்தியாசமான அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து சந்தன பாரதி, சித்தார்த், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பலரை  ‘மஞ்சுமல் பாய்ஸ்படக்குழுவினர் சந்தித்தனர். ‘குணாபடத்திற்கு சம்பந்தமே இல்லாத பலரை சந்தித்து வரும்மஞ்சுமல் பாய்ஸ்குழுவினர் இந்த படம் வெற்றி அடைய மிகப்பெரிய காரணமாக இருந்த இசைஞானி இளையராஜாவை இன்னும் சந்திக்கவில்லை என தெரிகிறது.



மஞ்சுமல் பாய்ஸ்வெற்றிக்கு இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டகண்மணி அன்போடு காதலன் நான்என்ற இளையராஜா கம்போஸ் செய்த பாடலும் ஒரு மிகப்பெரிய காரணம் என்றும் இந்த பாடலை நீக்கிவிட்டு இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக இந்த படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்காது என்றும் சமீபத்தில் சந்தான பாரதி  பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டு அந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தும் தனக்கு எந்த ராயல்டியும்மஞ்சுமல் பாய்ஸ்படக்குழுவினர் தரவில்லை என்ற கோபத்தில் இளையராஜா இருப்பாரோ என்பதால் தான் படக்குழுவினர் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இளையராஜாவைமஞ்சுமல் பாய்ஸ்படக்குழுவினர் சந்தித்ததாகவும் அது குறித்த புகைப்படம் தான் வெளியாகவில்லை என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர். எது உண்மை என்பது போக போகத்தான் தெரியும்.

Advertisement

Advertisement