• Jan 19 2025

'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் மூலம் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை! சந்தோஷ் நாராயணன் அதிருப்தி!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் சமூகவலை தளங்களில் பரவலாக ட்ரெண்டிங் ஆகி வைரலாக பாடல் என்றால் அது 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் தான். இதை ரீல்ஸ், டிக் டொக் என எல்லா வலைத்தளத்திலும் ரசிகர்கள் வைப் செய்து கொண்டிருந்தனர். 


இந்நிலையில் தற்போது 2 ஆண்டுகள் கடந்த நிலையில்  இயக்குனர் சந்தோஷ் நாராயணன் ஒரு பதிவொன்றை விடுத்துள்ளார்.  'எஞ்சாமி எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி நீங்கள் அறிந்ததே. இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானம் என்ன என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


இது நாள் வரையில் இந்தப் பாடல் மூலம் ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால், நான் எனது சொந்த ஸ்டுடியோவைத் துவங்கவுள்ளேன். தனி இசைக் கலைஞர்களுக்கு, வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை.


இதில் கூடுதலாக எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது. இதை பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன். தனி இசைக்கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என கூறியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.


Advertisement

Advertisement