• Jan 19 2025

முத்து வைத்த செக்மென்டில் ஓட்டமெடுத்த ரோகிணி புருஷன்! விஜயாவும் எஸ்கேஎப்..! அதிர்ச்சியில் மீனா

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், முத்து ஆட்டோ ஓட்டுவதை பார்த்த ரோகினி வீட்டில் வந்து விஜயாவிடம் சொல்ல, விஜயாவும் நான் கேட்டா அவன் பதில் சொல்ல மாட்டான் என்று அண்ணாமலையிடம் சொல்கிறார். அண்ணாமலை இதை யார் உனக்கு சொன்னது எனக் கேட்க, பார்வதி சொன்னதாக மழுப்புகிறார் விஜயா.

இன்னொரு பக்கம் மீனா பூக்கடையில் சென்று இருக்க, அங்கு முத்து ஒரு பாட்டியை ஆட்டோவில் இறக்குவதை பார்த்து மீனா அதிர்ச்சி அடைகிறார். இவர் எதற்கு ஆட்டோ ஓட்டுறார் என கன்பியூஸ் ஆகுறார்.

இதை தொடர்ந்து மீனா வீட்டுக்கு வர, அவரை நிற்க வைத்து விஜயா கேள்வி கேக்கிறார். உன் புருஷன் உன்கிட்ட எல்லாம் சொல்லிட்டு தானே பண்ணுவான், காருக்கு என்ன ஆச்சு என கேட்க, அண்ணாமலையும் முத்து ஆட்டோ ஓட்டுறது உனக்கு தெரியுமா என கேட்கிறார்.


அதற்கு மீனா, எனக்கு இப்பதான் தெரியும் மாமா, நானும் இப்பதான் பார்த்தேன் என சொல்லி செல்கிறார்.

இதை அடுத்து முத்து வீட்டுக்கு வர, விஜயா கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்கிறார். ரோகிணியும் அன்னைக்கு மனோஜ் செய்தத டிவியில் போட்டு காட்டினார். இன்றைக்கு இந்த விஷயத்தை ஏன் வீட்டுல மறைச்சாரு என  கேள்வி கேட்கிறார்.

அதற்கு நான் உழைச்சு தான் சம்பாதிக்கிறேன். ஆட்டோ தான் ஓட்டுறேன். பார்க்கில போய் படுத்துட்டு பொண்டாட்டிய ஏமாற்றல என பதிலடி கொடுக்கிறார்.

மேலும் விஜயா  மீண்டும் மீண்டும் பத்திரத்தை வைத்து வாங்கின கார், அந்த பணத்தை எனக்கு தான் தந்திருக்கனும் என சொல்ல, மனோஜ் 27 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துட்டு ஓடினான் தானே  அதை எடுத்து வைக்க சொல்லுங்க, அடுத்த நிமிஷமே நான் இந்த பணத்தை செட்டில் பண்றேன் என்று செக்மென்ட் வைக்கிறார். மனோஜ் இதைக்கேட்டு நைசாக நழுவிச் செல்கிறார்.

அதைத்தொடர்ந்து அண்ணாமலை காருக்கு என்னாச்சு? அப்படி என்ன பிரச்சனை? என கேட்க, அவசர தேவை அதன் காரை  வித்துட்டன். கண்டிப்பா அந்த பணத்தை அம்மாகிட்ட கொடுப்பேன். இந்த விஷயத்தை ஒரு நாளைக்கு உன்கிட்ட கட்டாயம் சொல்லுவேன் என சொல்லி செல்கிறார்.

அதன் பின் பிரச்சினை பெருசா போகும் என நினைத்த ரோகிணிக்கு இறுதியில் பல்பு கிடைத்தது. விஜயாவும் ஒன்றும் பண்ண முடியாது என கை விரித்து விட்டார்.

நீங்க காரை சும்மா வித்திருக்க மாட்டீங்க,  என்ன காரணம்? என மீனா கேட்க, முத்து சத்யாவை பற்றி பேசி கோபப்படுகிறார். மேலும், ஒரு பொண்ணு வெளியே போனா கேள்வி மேல கேள்வியா  கேக்குறாங்க. ஆனா ஒரு பையன மட்டும் கண்டிக்கிறதே இல்லை. இதனால் தான் எல்லா பிரச்சனையும் என சத்யாவை மறைமுகமாக திட்டி விட்டு செல்கிறார் முத்து. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement