எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் ரிலீசாக உள்ளது. இந்த படம் பகவந்த் கேசரி ரீமேக்தான் என்பது ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் மூலம் உறுதியானது.
தமிழ் சினிமாவில் 33 வருடங்களாக ரசிகர்களை மகிழ்வித்த விஜய், ஜன நாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விடை பெற உள்ளார். இதனால் இந்த படத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்கு அனைவரும் தயாராகி வருகின்றார்கள்.
விஜய் தற்போது அரசியலில் பிரவேசம் செய்திருக்கும் நிலையில் பகவத் கேசரி ரீமேக் நிச்சயமாக அவருக்கு உதவி செய்வதாக அமையும். இதனால் பெண்கள் மற்றும் ஃபேமிலிகளை ஈசியாக கவர்ந்து விடலாம் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனங்கள் ட்ரெய்லரிலேயே பட்டையை கிளப்புகின்றன.

மேலும் ஜனநாயகன் திரைப்படம் பகவன் கேசரியின் ரீமேக்காக இருந்தாலும் அது இடம்பெற்ற காட்சிகள் பாலகிருஷ்ணா செய்த போது காமெடியாக இருந்தன. ஆனால் விஜய் ஆக்சன் காட்சிகள் களமிறங்கும் போது யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். அவர் ஆக்ஷன் காட்சிகளுக்கு என பெயர் போனவர் தான்.
இந்த நிலையில், சுமார் 380 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில் விஜய் 220 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இயக்குனர் எச். வினோத்துக்கு 25 கோடியும், இசையமைப்பாளர் அனிருத்துக்கு 13 கோடியும், பாபி தியோல், பூஜா ஹெக்டேக்கு தலா 3 கோடி சம்பளமும் பேசப்பட்டுள்ளதாம்.
Listen News!