• Jan 18 2025

தக் லைப் நடிகரை சீண்டிய விமர்சகர்! போனில் வந்த மிரட்டல்! நடந்தது என்ன!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பல திறமையான நடிகர்கள் உள்ள நிலையில் அவர்கள் தமிழ் சினிமாவில் தலைகாட்டுவது வழக்கம். அந்த வகையில், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஜோஜு ஜார்ஜ்.


இவர் தற்போது கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி வெளியான பனி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறியப்பட்டார். 


இப்படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இப்படம் பற்றி எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டதற்காக ஜோஜூ ஜார்ஜ் போனில் அழைத்து மிரட்டியதாக சினிமா விமர்சகர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில் ’’ஒரு சினிமாவின் வெற்றிக்குப் பின் பலரது கூட்டு உழைப்பும், முயற்சியும் உள்ளது. நான் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவன் கிடையாது. ஒரு படம் பற்றி விமர்சிக்க சினிமா விமர்சகர்களுக்கு முழு உரிமையுள்ளது. இதற்கு முன்பு பல படங்கள் விமர்சனம் செய்யப்பட்டன. அதேபோல் நான் யாரிடமும் இதற்கு முன் போனில் அழைத்து பேசியதில்லை என்று கூறியுள்ளார் ஜோஜூ ஜார்ஜ் . 


Advertisement

Advertisement