• Nov 23 2025

முகுந்த் ஆகவே வாழ்ந்துட்ட தம்பி..! அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயனை கட்டியனைத்த சீமான்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமலகாசனின் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியாகிய அமரன் திரைப்படமானது மக்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும் சாய் பல்லவி, பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.இது இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட சிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க சி. எச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.


இப்படத்திற்கு பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் தற்போது சீமான் அவர்கள் சிவகார்த்திகேயனை தியட்டரில் கட்டியணைத்து "நீ முகுந்த் ஆகவே வாழ்ந்திட்ட தம்பி சாய்பல்லவி சின்ன கதாபாத்திரங்களே அழகாக நடிப்பார் அவரும் இந்து ரெபேக்காவாக சூப்பராக நடித்துள்ளார்."என புகழ்ந்து தள்ளியுள்ளார்.இது மட்டுமல்லாமல் கமலிற்கு தொலைபேசியினுடாகவும் வாழ்த்து கூறியுள்ளார் சீமான்

Advertisement

Advertisement