சின்னத்திரை மற்றும் தமிழ் திரையுலகில் தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் பிரபலமான நடிகை ஆண்ட்ரியா, சமீபத்தில் வெளியான “மாஸ்க்” திரைப்படம் குறித்து மனம் திறந்து கதைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு, தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

சமீபத்திய பேட்டியில், படத்தை தயாரிப்பதற்காக எடுத்த தனிப்பட்ட முயற்சி, அதனால் ஏற்பட்ட அனுபவங்களை அவர் பகிர்ந்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார்.
ஆண்ட்ரியா பேட்டியின் போது, “மாஸ்க் திரைப்படத்தை தயாரிப்பதற்காக எனது வீட்டின் மீது கடன் எடுத்தேன். இந்த முடிவு தவறானது என பலர் என்னை திட்டினார்கள். ஆனால் படங்களில் நடித்து தான் இந்த வீட்டை கட்டினேன். அதனால் அதை திரும்ப படங்களுக்கே கொடுப்பது தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.” எனக் கூறியிருந்தார்.

இந்த உரையால், ஆண்ட்ரியாவின் மனதில் உள்ள உறுதியும், தொழில்முறை நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. இவர் எடுத்த இந்த தீர்மானம் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. சிலர் இது ஒரு துணிச்சலான முயற்சி என பாராட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!