சின்னத்திரை மற்றும் திரையுலகில் தனது திறமை மற்றும் சமூகப் பொறுப்புக்கான பங்களிப்பால் பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் செல்லப்பிராணிகள் மற்றும் நாய்கள் பராமரிப்பு குறித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்து கவனம் ஈர்த்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி பலருக்கும் விழிப்புணர்வளிக்கின்ற வகையில் காணப்படுகின்றது.
நிவேதா பேட்டியில்,“நாய்களை பராமரிக்க முடியாமல் ரோட்டிலேயே விடுறாங்க… உங்களால பராமரிக்க முடியலைன்னா காசு கொடுத்து வாங்கி வளர்க்காதீங்க. தெரு நாய்களை பாதுகாப்பது அரசின் கடமை. இது தொடர்பாக குழந்தைகள் முதல் அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
நிவேதா இந்த கருத்தை வெளியிடுவதன் மூலம், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செல்லப் பிராணிகளைப் பற்றிய பொறுப்பான அணுகுமுறையைக் கொடுத்துள்ளார்.
Listen News!