• Jan 19 2025

உலக நாயகனை வச்சு என்னடா பண்ணுறீங்க? இது எந்த படத்தில் போட்ட கெட்டப் தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக காணப்படும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கல்கி 28 98 ஏடி. இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் மாறுபட்ட கெட்டப் போட்டு ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

வரலாற்று பின்னணியும் அறிவியலையும் ஒன்றிணைத்து தற்காலத்திற்கு ஏற்ற மாதிரி படத்தை இயக்கியிருந்தார் நாக் அஸ்வின். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ், அமிதாபச்சன், தீபிகா படுகோன் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார்கள்.

இதில் உலக நாயகன் கமலஹாசன் சுப்ரீம் யாஷ்கின் என்கிற எதிர்மறை வேடத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தார். இவரது காட்சிகள் முதலாவது பாகத்தில் பெரிதாக காட்டப்படாத போதும் அதுவே போதுமானதாக காணப்பட்டது. இரண்டாவது பாகத்திலேயே இவரின் சம்பவம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.


இந்த நிலையில், நடிகர் கமலஹாசன் சுப்ரீம் யாஷ்கின் கேரக்டராக மாற எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்பதை தெரிவிக்கும் விதத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதில் கமலஹாசன் தன்னுடைய முகம் மட்டும் தலையில் சிந்ததிக் ஸ்கின் அதாவது தனது தோல் போலவே இருக்கும் செயற்கையான தோலை தலையில் பாதி மட்டுமே ஒட்டியபடி காணப்படுகின்றார்.

இந்த மேக்கப் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதனை போடுவதற்கு நான்கு மணி நேரம் கலைப்பதற்கு இரண்டு மணி நேரமும் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement