• Jan 19 2025

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்கள்... படக்குழுவினர் மீது பாய்ந்த வழக்கு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் நிவின் பாலி - நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் டிராமா படத்தை இயற்றி புகழ் பெற்றவர் தான் அர்ஜுன் டீ.ஜோஸ். தற்போது இவர் இயக்கி வரும் படம் ப்ரோமான்ஸ். இந்த படத்தில் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த மேத்யூ தாமஸ் இதில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சாலையில் கார் சேஸிங் காட்சி படமாக்கப்பட்ட போது புட் டெலிவரி செய்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதில் உணவு டெலிவரி பண்ணுபவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு, கார் கவிழ்ந்ததில் காரின் உள்ளே முன்பக்கம் இருந்த நடிகர் அர்ஜுன் அசோகன் மற்றும் பின்பக்கம் இருந்த சங்கீத் பிரதாப்புக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூவரும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்கள்.

இந்த விபத்து குறித்து விசாரித்த காவல்துறையினர் காரை வேகமாக ஓட்டியதற்காக படக்குழு சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.மேலும் படப்பிடிப்பின் போது எந்தவித பாதிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement