சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் வாங்கிய புதிய பேலஸில் பேய் இருக்கா? இல்லையா? என்பதை கண்டுபிடிப்பதற்கு பேயோட்டும் பெண்மணி ஒருவர் வருகின்றார். அவரிடமும் பஞ்ச் டயலாக் விட்டு அலறவிடுகின்றார் முத்து.
எனினும் வீட்டில் உள்ள லைட்டுகளை எல்லாம் போட்டு ஒரு லைட் மட்டும் எரிந்தால் இந்த வீட்டில் பேய் இருக்குது என்று எல்லாரையும் பயமுறுத்துகின்றார். மேலும் எல்லோரையும் கண்ணை மூடி நிக்க சொல்லி, வீட்டை சுற்றி சுற்றி தியானம் செய்கின்றார்.
இதன் போது முத்து வெளியே ஓடி விடுகின்றார். அப்போது வீட்டில் உள்ள லைட்டுகள் எல்லாம் பத்தி பத்தி அணைய இதை பார்த்து எல்லாரும் மரண பீதி அடைகின்றார்கள். இதனால் மெயின் லைட்டை ஆப் பண்ணினால் எந்த பிரச்சினையும் இல்லை என்று முத்து ஆஃப் பண்ணிவிட்டு வருகின்றார்.
இதை தொடர்ந்து இந்த வீட்டில் எந்த ஆத்மாவும் இல்லை என்று குறித்த பெண்மணி சொல்லுகின்றார். இதன் போது பொய் சொன்னால் பேய் பிடிக்குமா என்று ரோகினியை பார்த்து முத்து கேட்கிறார்.
அதற்கு குறித்த பேய் ஓட்டும் பெண்மணி, பேய்க்கு பொய் சொன்னால் பிடிக்காது. அப்படி பொய் சொல்பவர்களை ஏறி இருந்து அமுக்கும், உடலுக்குள் புகுந்து ரணகளம் பண்ணும் என்று பயமுறுத்துகின்றார். அதன் பின்பு மனோஜிடம் பெரிய அமௌண்டாக வாங்கிவிட்டு செல்லுகின்றார்.
இதை தொடர்ந்து மதியம் ஆகிவிட்டதால் எல்லோருக்கும் சாப்பாடு வாங்குவதற்காக முத்துச் செல்கின்றார். ஆனாலும் விஜயா சாமான்களை வாங்கி மீனாவை சமைக்குமாறு சொல்ல, இங்க வந்தும் மீனாதான் சமைக்கணுமா என்று பதிலடி கொடுத்து செல்லுகின்றார் .
Listen News!