நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அத்துடன் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அபிராமி, அனுராக் காஷியப், சாச்சனா, நட்டி, சிங்கம் புலி உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு 50வது படமாக அமைந்தது.
தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு, பெண் குழந்தைங்களுக்கு நடத்தப்படும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் போன்றவற்றை மையக்கருத்தாக கொண்டு இந்த படத்தை இயக்கியிருந்தார் நித்திலன்.
மகாராஜா படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது திரைக்கதைத்தான். நான் லீனியன் பாணியில் திரைக்கதையை நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர். இந்த வகையான ஸ்கிரீன் பிளே கொஞ்சம் சொதப்பி இருந்தாலும் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் அதனை புரிந்து கொண்டு புத்திசாலித்தனத்துடன் திரைக்கதையை அமைத்துள்ளார்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் மகாராஜா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் உலக அளவில் புகழ் அடைந்து சீனாவிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. சீனாவில் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.
இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் மெகா வெற்றியைப் பெற்றதை தொடர்ந்து இயக்குனர் நித்திலனுக்கு 80 லட்சம் மதிப்புள்ள பிஎம் டபிள்யூ கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் தயாரிப்பாளர். இவ்வாறு படத்தின் இயக்குனர் நித்திலனுக்கு தயாரிப்பாளர் காரை பரிசாக கொடுக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!