பிரபல நடிகை கீர்த்தி சுரேசுக்கு சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலுடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது கழுத்தில் தாலியுடன் கிளாமரான உடையில் வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தியின் கல்யாணம் கோவாவில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்து முறை படியும், கிருஸ்தவ முறை படியும் நடந்தது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த போட்டோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது.இந்நிலையில் கல்யாணம் முடிந்த கையோடு புது பெண் அல்ட்ரா மாடர்ன் உடையில் திரைபட விழாவில் கலந்து கொண்ட போட்டோ தற்போது ட்ரெண்ட் ஆகி உள்ளது.
கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட்டில் பேபி ஜான் படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் ப்ரமோஷன் தற்போது ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் அவர் சிவப்பு நிற கவர்ச்சியான உடையில் கழுத்தில் தாலியுடன் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் படுவேகமாக ஷேர் செய்து வருகின்றனர். இப்படியா ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு கிளாமர் காட்டுவது என விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
Listen News!