• Apr 01 2025

TRP ரேட்டிங்கிற்காக திக்குமுக்காடும் விஜய் டிவி..! அடுத்த மகாசங்கமம் ரெடி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய தொலைக்காட்சிகளில் இடம்பெறும் சீரியல்கள், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என்பன டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைப்பதற்காக வித்தியாசமான பல முயற்சிகளை கையாளுகின்றன.

அந்த வகையில், தமிழ் தொலைக்காட்சிகளான விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் டிவி என்பவற்றுக்கு இடையில் பெரிதும் போட்டி நிலவுகின்றன.

விஜய் டிவியின் சீரியல்கள் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 லிஸ்டில் இடம் பிடிக்க கூட முடியாமல் திணறி வருகின்றன. 


விஜய் டிவியின் முக்கிய  சீரியலான பாக்கியலட்சுமியின் ரேட்டிங் தற்போது மிகவும் குறைந்த அளவில் தான் வருகிறது.

தற்போதைக்கு சிறகடிக்க ஆசை தொடர் தான் விஜய் டிவியில் முன்னணியில் இருந்து வருகிறது. 

இதை தொடர்ந்து, சமீபத்தில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய தொடர்களை இணைந்து மகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மகாநதி - ஆஹா கல்யாணம் ஆகிய இரண்டு சீரியல்களை இணைத்து மகாசங்கமம் வர இருக்கிறது. 

Advertisement

Advertisement