• Jan 18 2025

முக மூடியுடன் திரியும் மாயா, பூர்ணிமா! பிரதீப்பை சந்திக்க ரகசிய திட்டமா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றினால் தமக்கு சினிமாவில் வாய்ப்புக்கள் குவியும் என்ற எண்ணத்தில் தான் அதிக பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுகின்றார்கள்.

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றி, சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக காணப்பட்டாலும், அவர்களது நட்பை பலரும் ரசிக்கும் வகையில் காணப்படும் போட்டியாளர்கள் தான் மாயா, பூர்ணிமா.

பிக் பாஸ் வீட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய திருப்பங்களுக்கு மாயா, பூர்ணிமா தான் முக்கிய காரணம் என பலராலும் விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றார்கள்.


எனினும், பிக் பாஸ் வீட்டில் இருந்த மட்டில் மாயா, பூர்ணிமா தான் மக்களை அதிகளவில் என்டேர்டைன்மென்ட் செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட 16 லட்சம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேற, மாயா இறுதி பினாலே மட்டும் சென்றார்.


மாயாவின் ரசிகர்கள் மாயா தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என எண்ணிய நிலையில், அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து வெளியில் வந்த மாயாவுக்கு, வெற்றியாளரை விட மேள தளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மாயா, பூர்ணிமா இருவரும் முகமூடி அணிந்து கொண்டு திரிவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் இருவரும், பொது மக்களுக்கு பயந்து, பிரதீப் விஷயத்திலும் பயந்து இருப்பதால் தான் இவ்வாறு முகமூடி அணிந்து திரிகிறார்கள் என சோசியல் மீடியாவில் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement