• Oct 04 2024

ராம் சரணின் படத்தை நிராகரித்த விஜய் சேதுபதி.. என்ன காரணம் தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக மகாராஜா திரைப்படம் காணப்படுகின்றது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மிகவும் எதார்த்தமாக நடித்திருந்தார்.

மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை வசூலித்து. இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி அதிலும் பட்டையை கிளப்பியுள்ளது. சுமார் 18.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்திய சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்திருந்தது.

இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு ஆர்சி 16 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட ராம் சரணின் படத்தில் தம்பியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவர் உப்பென்ன மற்றும் மகாராஜா படங்களில் நடிப்புடன் காரணமாக ராம் சரணின் படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம். அதற்குப் பிறகு அவருடைய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


உப்பென்ன மற்றும் மகாராஜா படங்களை ஏன் காரணமாக கூறினார் என்றால் இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு வெளியான உப்பென்னா படத்தில் கீர்த்தி செட்டிக்கு தந்தையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதேபோல மகாராஜா படத்திலும் விஜய் சேதுபதி தந்தையாக நடித்து இருந்தார்.

இவ்வாறு தந்தை கேரக்டரில் நடித்ததற்கு பாராட்டைப் பெற்றிருந்தாலும் எதிர்காலத்தில் இதைப் போன்ற பாத்திரங்களில் நடிக்க தயங்குவதாக இயக்குனர் புச்சிபாபு உடன் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மீண்டும் தந்தையாக நடிப்பதை விட ஏனைய கேரக்டர்களையும் ஆராய விரும்புவதாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement