• Jan 07 2026

இசையைப் போல என்றும் இளமையோடு இருக்க வேண்டும்.! ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

உலகளாவிய அளவில் பிரபலமான இசைப்புயல்,ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இசையின் எல்லைகளை தாண்டி உலகத்தை கவர்ந்த இவர், பல மொழிகளில் இசையமைத்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார்.

இந்தப் பிறந்தநாள் விழாவில் பலரும் இசைப்புயலுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். இதில் முக்கியமான வாழ்த்து, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்காக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஆகும்.


முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில், “இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து சாதனைகளைப் படைத்திட விழைகிறேன்.” என்று கூறியுள்ளார்.

இந்த வாழ்த்து சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. ரஹ்மான் ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கலைத்துறையினர் இதனை பரவலாக பகிர்ந்துள்ளனர்.

Advertisement

Advertisement