• Sep 14 2024

ஹை ஸ்பீடில் கெத்து காட்டும் அஜித்குமார்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் 5 நடிகர்களுள் முக்கியமானவராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

இயக்குனரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடையும் எனவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்தப் படத்தில் நடிக்கும் அஜித்குமாரின் தோற்றம் மற்றும் அர்ஜுனனின் கேரக்டர் திரிஷா, ரெஜினா, ஆரவ் ஆகிய ஒவ்வொருவரின் கேரக்டரையும் படக்குழுவினர் போஸ்டரில் வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தனர்.


விடாமுயற்சி படத்தின் தொடர்ச்சியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பிலும் பங்கு பற்றி வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் எனவும் அதன் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் வேகமாக கார் ரேஸ் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஹை ஸ்பீடில் அஜித்குமார் காரை செலுத்தி வருகின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.


Advertisement

Advertisement