• Jan 19 2025

கோபுரத்துல ஒட்டின குப்பை தான் யோகி பாபு! முடிஞ்சா உன் குழந்தை மேல சத்தியம் பண்ணு.. ஆவேசத்தில் வலைப்பேச்சு டீம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பற்றியும் புதிய படங்களின் அப்டேட்கள் பற்றியும் மற்றும் கிசுகிசுக்கள் பற்றியும் தினமும் வீடியோக்களாக  பதிவிட்டு வருவதில் வலைப்பேச்சு அந்தணனும் பிஸ்மியும் பிரபலமாக காணப்படுகின்றார்.

மூத்த பத்திரிகையாளர்களான இவர்கள் மீது பாசிட்டிவ் விமர்சனங்களும் நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தாலும்  பெரிதாக யாரும் இவர்களை தாக்காத நிலையில், தொடர்ந்து செய்திகளை தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், வலைப்பேச்சு யூடியூப் சேனலை நடத்தி வரும் அந்தணன் மற்றும் பிஸ்மி ஆகியோர் யோகி பாபுவுக்கு எதிராக சவால் விட்டிருக்கும் தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது ஏற்கனவே வலைப்பேச்சில் யோகி பாபு சில இயக்குனர்களுக்கு டார்ச்சர் கொடுத்து வருவதாக பேசியிருந்தார்கள். ஆனால் இதோடு சம்பந்தப்பட்ட இயக்குனர்களே சொன்னதாக கூறிய அவர்கள், யார் அந்த இயக்குனர்கள் என வலைப்பேச்சில் சொல்லவில்லை. இந்த விடயம் யோகி பாபுவின் காதுக்குச் செல்ல, அதைப்பற்றி சமீபத்தில் யோகி பாபு பேசிய பேச்சுதான் தற்போது வலைப்பேச்சு சேனலில் உள்ளவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.


அதாவது வலைப்பேச்சில் தங்களை கவனிக்கச் சொல்லுங்கள். கவனித்தால் தான் இந்த மாதிரி இனி பேச மாட்டோம் என யோகி  பாபுவுக்கு கூறியதாக அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை கேட்ட அந்தணன் மற்றும் பிஸ்மி ஆவேசத்தில் யோகி பாபு  பற்றி சொல்லப்படாத செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அதன்படி ஒருமுறை ஜோகி பாபு ஒரு பெரிய நடிகரின் கையை தொட அதற்கு அந்த நடிகர் டோன்ட் டச் என சொன்னதாக செய்தி வைரலாக இருந்தது. ஆனால் அந்த நடிகர் யார் என்பதை இவர்கள் சொல்லவில்லை. இதை வலைப்பேச்சில் சொல்ல சொன்னதே யோகிபாபு தானாம். அது மட்டும் இல்லாமல் தாங்கள் காசு கேட்டதாக சொல்கின்றாரே யோகி பாபு, அவர் குடும்பத்தையும் விட பெரிதாக நினைக்கும் முருகன் கோவில் அல்லது திருத்தணி கோயிலுக்கு வந்து சத்தியம் பண்ண சொல்லுங்கள் என சவால் விட்டுள்ளார்கள்.

நாங்கள் காசு கேட்டோமா இல்லையா என்று அவர் குழந்தையை மீது சத்தியம் பண்ண சொல்லுங்கள். நாங்களும் எங்கள் குழந்தை மீது சத்தியம் பண்ணுகின்றோம்.மேலும் அஜித் தன்னை மோசமாக நடத்துகிறார் என்றும் யோகிபாபு இவர்களிடம் கூறினாராம்.

 அதுமட்டுமல்லாமல் அந்தணனும் பிஸ்மியும் ஆத்திரத்தில் யோகி பாபுவின் காமெடி நன்றாகவே இல்லை. நீங்கள் ஒரு காமெடி நடிகரும் கிடையாது எனக் கூறியிருக்கிறார்கள். மேலும் தமிழ் சினிமா பல திறமையானவர்களை கோபுரத்தில் தான் வைக்கும். சில நேரங்களில் குப்பைகளும் கோபுரத்தில் போய் ஒட்டிக் கொள்ளும். அப்படிப்பட்ட ஒரு குப்பை தான் யோகி பாபு என கூறி இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement