லண்டனில் நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் ரவுண்ட் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி பங்கேற்க உள்ள நிலையில், இந்தப் போட்டியை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
சில்வர்ஸ்டோன் சுற்றில் நடைபெறும் தகுதிச்சுற்று போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், நாளை மாலை மெயின் பந்தயம் தொடங்கவுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த பரபரப்பான கார் பந்தயத்தில், மொத்தம் 5.891 கிலோமீட்டர் நீளமுள்ள சுற்றுப்பாதையில் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர். இந்த பாதையில் 18 வளைவுகள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் அஜித்குமார் நீண்ட காலமாக கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருவதுடன், தனது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அணியுடன் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதனால் அஜித் குமார் அணி பங்கேற்கும் ஒவ்வொரு பந்தயமும் அவரது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அஜித் அணி பங்கேற்கும் போட்டியை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இரு தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இந்த தருணத்தை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Listen News!