• Jan 18 2025

கள்வன் போஸ்டருடன் சென்னையை சுற்றும் பேருந்து! ப்ரோமோஷனில் காசை கரைக்கும் படக்குழு.. வைரலாகும் வீடியோக்கள்!

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளராக இருந்து பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜிவி பிரகாஷ் சமீபத்தில் நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவ்வாறே இவர் நடித்த "ரிபெல்" திரைப்படம் வெளியாகியதுடன் டியர் மற்றும் கள்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்த நிலையிலேயே கள்வன் படக்குழுவினர் குறித்த படத்தை விளம்பர படுத்துவதற்காக பல புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.



PV சங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் "கள்வன்" ஆகும். குறித்த படத்தில் நடிகை இவானா , தீணா , பாரதி ராஜா என பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடிக்கின்றனர். இவ்வாறு இருக்கையிலேயே இந்த படத்தை விளம்பர படுத்துவற்காக படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் இன்டெர்வியுகளை கொடுத்துவந்தனர்.



சமீபத்தில் யானை உருவம் ஒன்றில் படத்தின் போஸ்டர்களை ஒட்டி ஊர்வலமாக வந்த காணொளிகள் வைரலாகியது.இந்த நிலையிலேயே இன்னும் ஒரு புதிய முறையில் விளம்பரங்களை மேற்கொண்டுள்ளனர்.
அதாவது சென்னையில் உள்ள தனியார் பேருந்தில் சுற்றி முழுமையாக கள்வன் படத்தின் போஸ்டர்களை  ஒட்டி வீதிகளில் நடமாட விட்டுள்ளனர் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement