• Jan 19 2025

இயக்குநர் பிரபு சாலமனின் அடுத்த படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் வனிதா மகன் ஸ்ரீஹரி!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் மூன்று தலைமுறைகளை கடந்த சினிமா குடும்பமாக திகழ்வதுதான் விஜயகுமாரது குடும்பம். ஆனாலும்  அவரது மகள் வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு விலகி தனது பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதாவுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். அதன்பின் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித் தனியாக பிரிந்து சென்றுவிட்டனர். அதில் ஒரு குழந்தை ஜோவிகா வனிதாவுடனும்,  ஸ்ரீஹரி விஜயகுமார் வீட்டிலும் அவருடைய அப்பா ஆகாஷ் வீட்டிலும் வாழ்ந்து வருகிறார்.


அண்மையில் இடம்பெற்ற விஜயகுமாரின் பேத்தி தியா கல்யாணத்தில் கூட வனிதாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பில் பல்வேறு சர்ச்சை பதிவுகள் எழுந்தபோதும், சிங்கம்  எப்பவும் சிங்கிளாத்தான் இருக்கும் என்பது போல வனிதா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வைத்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் படத்தில் வனிதா விஜயகுமார் - ஆகாஷ் மகன் ஸ்ரீஹரி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 இயக்குனர் பிரபு சாலமன் எடுக்கக்கூடிய படங்களில் இயற்கை சம்பந்தமான கதையும், காடு மற்றும் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement