• Dec 04 2024

டெல்லி கணேஷன் மறைவினால் நிலை தடுமாறிய வடிவேலு.! அன்பை இழந்து கதறல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இடையே டெல்லி கணேசின்  மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய மரணம் பலரையும் நிலை தடுமாற  வைத்துள்ளது. தற்போது பலரும் அவருக்கு நேரில் சென்று தமது அஞ்சலியை தெரிவித்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பல வேடங்களில் நடித்து பிரபலமானவர்தான் டெல்லி கணேஷ். கிட்டதட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

80ம் ஆண்டு கால பகுதிகளில் ஹீரோக்களின் படங்களில் அண்ணனாக, தம்பியாக, நண்பராக பல கேரக்டரில் நடித்திருப்பார். அதிலும் நாயகன் படத்தில் ஐயர் கேரக்டரில் நடித்திருப்பார். அதேபோல விஷால் நடித்த இரும்புத்திரை   படத்திலும் அப்பாவியான தகப்பனாக நடித்திருப்பார்.

d_i_a

இதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான அரண்மனை 4, இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 


இந்த நிலையில், வைகை புயல் வடிவேலு டெல்லி கணேசன் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளதோடு, அன்பை இழந்துவிட்டேன்.. எனக்கு பிடித்த எத்தனையோ நடிகர்களில் அண்ணன் டெல்லி கணேசன் ஒருவர். அவரின் எதார்த்தமான நடிப்பையும் அன்பையும் நான் இழந்து விட்டேன். நாங்கள் இணைந்து பணியாற்றிய போது அவர் எனக்கு கொடுத்த அறிவுரைகளை என்னால் மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.

தற்போது டெல்லி கணேசன் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் வழங்கிய பேட்டியும் அவர்கள் நேரில் சென்று அளித்த அஞ்சலி நிகழ்வுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இன்றைய தினம் டெல்லி கணேசன் இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement