• Jan 19 2025

இந்திய விமான படை இறுதி அஞ்சலி... இறுதி ஊர்வலத்தில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் நவயது முதிர்வு மற்றும் உடல்நல பிரச்சினைகள் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில் இந்திய விமான படையில் டெல்லி கணேஷ் விமானப்படை அதிகாரியாக இருந்துள்ளார். இதனால் இவரின் உடலுக்கு இறுதியாக இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற விமானப்படை வீரர்கள், டெல்லி கணேஷ்உடல் மீது தேசியக்கொடி போர்த்தியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். 

d_i_a


இதனையடுத்து தற்போது நடிகர் டெல்லி கனேஷின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியுள்ளது. நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்வதற்காக அவரது உடல் எடுத்து செல்லபடுகிறது. உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கண்ணீர் மல்ல இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர். 


Advertisement

Advertisement