பிரபல ராப்பர் பால் டப்பா ஓரிரு பாடல்களின் மூலம் உலகளவில் பிரபலமாகிவிட்டார். சாதாரணமாக பாடல் பாட தொடங்கிய இவருக்கு ராப் பாடல்கள் அங்கீகாரம் தந்தது. இவரின் பாடல் திறன் அதனை கையாளும் விதம் நடனம், உடை என்பன ரசிகர்களை ஈர்க்கவே இவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள்.
இவரின் அமைப்பில் சமீபத்தில் வெளியான மக்காமஷி, கத்துமேல போன்ற பாடல்கள் மிகவும் வைரலாகி ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே கலந்துரையாடல் ஒன்றில் தான் எவ்வாறு இந்த பயணத்தினை ஆரம்பித்தேன் என்பது குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில் "கொரோனா காலகட்டத்தின்போது, வெளியே எங்கேயும் சுத்த முடியாம போச்சு.
d_i_a
வீட்டுக்குள்ளேயே இருக்குறதும் பிடிக்கலை. டி.வி சேனல்கள்ல டெத் நியூஸா பார்த்தும் பார்த்து இன்னும் மனசு சோர்வாகிடுச்சு. அப்படிப்பட்ட சூழலை மையப்படுத்தி ஒரு பாட்டு எழுதினேன். அப்பிடியே என் திறமையை வளர்த்துக்கிட்டேன். ராப் பாடல்களை உருவாக்கினேன். அப்பா எனக்குனு வீட்டுல சின்னதா ஒரு ஸ்டூடியோ செட் பண்ணிக் கொடுத்தார். அங்கேதான் டான்ஸ்ல இருந்து பாடல் வரை பயிற்சி எடுத்தேன். அந்தச் சமயத்துல எழுதின சுயாதீனப் பாடல்கள்தான் அதன் பிறகு வெளியாகி ரீச் ஆச்சு" என்று உறியுளார் பால் டப்பா.
Listen News!