• Jan 07 2026

இது தான் அந்த குட்டி ஸ்டோரியா!ஸ்டோரி சொல்லி மாநாட்டினை உற்சாகப்படுத்திய இளைய தளபதி..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் கட்சியின் முதல் மாநாடு இன்று நடைபெற்றுக்கொண்டுள்ளது குறித்த மாநாடானது இன்று 4.30 மணியளவில்  அளவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இருப்பினும் காலையிலேயே தொண்டர்கள் அனைவரும் கூடியமையினால் நேரத்திற்கு முன்பாகவே மாநாடு ஆரம்பமாகிவிட்டது இன்றைய தினம் மாநாட்டிற்கு சென்றவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இது ஒருபுறம் இருக்க இளைய தளபதி விஜய் அவர்கள் மாநாட்டில் குட்டி ஸ்டோரி ஒன்றினை கூறியுள்ளார்.


அதில்"கெட்ட பய சார் அந்த சின்ன பையன் ஒரு நாட்டுல பெரிய போர் வந்ததாம்.. பவர் ஃபுல்லான தலைமை இல்லாததால் பச்சப்புள்ள கையில பொறுப்பு இருந்ததாம். அதனால அந்த நாட்டுல இருந்த பெரும் தலைகள் பயத்துல இருந்தாங்களாம். அந்த சின்ன பையன் நாட்டுடைய படையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 'போர்க்களம் போலாம்' என சொன்னார்களாம்..அப்போது அந்த பெருந்தலைகள் நீ சின்ன பையன் என்றெல்லாம் சொன்னார்களாம். எந்த பதிலும் சொல்லாமல் போருக்கு தனியாக தன் படையுடன் சென்ற அந்தப் பையன் அடுத்து என்ன செய்தான், என்ன நடந்ததென தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க! சங்க இலக்கியத்தில் இதை சொல்லியுள்ளார்கள். ஆனா..கெட்டப் பய சார் அந்த சின்னப்பையன்! என மிகவும் அழகாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement