தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தற்போது தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகின்றது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை 4:30 மணிக்கு மேல் இந்த விழா தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகளவான தொண்டர்கள் காலையிலேயே கூடியதால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே கட்சியின் மாநில மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாநாடு ஆரம்பிக்கப்பட்டதும் அங்கு அமைக்கப்பட்ட 800 மீட்டர் ராம்ப்வாக் மேடையில் தளபதி விஜய் நடந்து சென்று தனது ரசிகர்களுக்கு தொண்டர்களுக்கும் கை அசைத்து உற்சாகப்படுத்தி இருந்தார். அதன் பின்பு ரிமோட் மூலம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிகொள்கையும் செயல் திட்டமும் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழக வெற்றி கழக கட்சியின் செயல் திட்டம் குறித்து பார்க்கலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே முதல் கோட்பாடு
மதம்,சாதி,இனம், மொழிக்குள் மனித சமூகத்தைச் சுருக்கக் கூடாது.
மக்களை பாகுபடுத்தாமல், சம உரிமைகளை வழங்க வேண்டும்.
மாநில,மத்திய அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்போம்.
விகிதாச்சார இட ஒதுக்கீடே உண்மையான சமூக நீதி எல்லா வகைகளிலும் ஆண்களுக்கு பெண்கள் சமம்
இருமொழிக் கொள்கையே தவெக-வின் மொழிக்கொள்கை
மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பது * தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குவது.
பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்போம்
அரசு,தனியார் துறைகளில் ஊழலற்ற நிர்வாகம்
சுற்று சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்போம்
போதையில்லா தமிழகம் படைப்போம்
இவ்வாறு விஜய் தனது தமிழக வெற்றி கழக கட்சியின் செயற்திட்டங்கள் பற்றி எடுத்து கூறியுள்ளார். மேலும் தான் சினிமாவில் ஆரம்பத்தில் வந்த போது மூஞ்சி சரியில்லை, முடி சரியில்லை என்று பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் தான் தனது உழைப்பை மட்டுமே நம்பி இந்த நிலைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!