• Mar 14 2025

சிம்புவின் அடுத்த படம் எடுப்பதில் சிக்கல்..! காரணம் இது தான்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள str 48 திரைப்படம் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பெரிய இன்னல்களினை சந்தித்து வருகின்றது.அதாவது ஆரம்பத்தில் ராஜ்கமல் ப்ரொடக்சன் இப்படத்தினை தயாரிப்பதற்கு தீர்மானித்திருந்தபோது இப்படத்தின் பட்ஜெட் 200 கோடிக்கு மேல் இருந்துள்ளது.


இருப்பினும் இப்படத்தினை தயாரிப்பதிலிருந்து குறித்த நிறுவனம் விலகியதும் தற்போது இயக்குநர் குறித்த தொகையினை குறைத்து 170 கோடி ஆக மாற்றியுள்ளதுடன் அதற்கு குறைவாக படம் எடுக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது டுபாய் தொழிலதிபர் ஒருவருடன் 100 கோடிக்குள் இப்படத்தினை எடுத்து முடிப்பதற்கு இயக்குநர் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.இப் படம் டேக் ஆப் ஆகுமா இல்லையா என படக்குழு குழப்பத்தில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

Advertisement

Advertisement