பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றது. அதில் பல சுவாரசிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
பிக்பாஸில் போட்டியாளர்களை பார்க்க வந்த குடும்பத்தாருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ஹவுஸ்மேட்ஸ், வெளி உலகில் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டேஞ்சர் சோனில் உள்ள மூன்று போட்டியாளர்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி டேஞ்சர் சோனில் பவித்ரா, ஜெஃப்ரி மற்றும் அன்சிகா ஆகியோர் காணப்படுகின்றார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனாலும் இந்த வாரம் சில நேரங்களில் டபுள் எலெக்ஷன் கூட நடைபெறலாம் என்றும் கூறப்படுகின்றது .
Listen News!