• Jan 19 2025

''எனக்கு இது தான் பலம் '' சரவண விக்ரம் வெளியிட்ட முதல் வீடியோ..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் இறுதியாக வெளியேறியவர் தான் சரவண விக்ரம். இவர் பிக் பாஸ் வர முன்பே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதல் தற்போது வரையில் அவரது உண்மை முகம் தெரியவே இல்லை எனலாம் . அவர்  கேப்டனாக இருந்த வாரம் கூட அவராக எந்த முடிவையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இவ்வாறு அவர் தொடர்பில் பல விமர்சனங்கள் குவிக்கப்பட்டது.


எனினும், ஒரு கட்டத்தில் தான் டைட்டில் வின் பண்ண வாய்ப்பு இருப்பதாக அவரே கூறிக்கொண்டு, பிக் பாஸ் வீட்டில் தனது பயணத்தை தொடர்ந்த அவர், கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவண விக்ரம், தனது பிக் பாஸ் பயண வீடியோவுடன் பதிவொன்றை இட்டுள்ளார்.


அதன்படி அவர் வெளியிட்ட பதிவில், கடினமான காலங்களில் என்னுடன் இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் ஆதரவு எனக்கு பலம் தந்தது.

அருமையான வாய்ப்பை வழங்கிய #BiggBoss க்கு சிறப்பு நன்றி, மேலும் #Bb7 குழுவில் உள்ள எடிட்டர்கள் முதல் உள்ளடக்க இயக்குனர்கள் வரை ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.. என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement