லோகேஷ் கனகராஜ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி திரைக்கு வந்த படம் தான் கூலி. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா மற்றும் சௌபின் ஷாகிரும் நடித்திருந்தார். அமீர்கான் கூட கேமியா ரோலில் மிரட்டி இருப்பார்.
கூலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளே நெகடிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. லோகேஷ் இயக்கிய படங்களிலேயே வேஸ்ட் ஆன படம் இதுதான் என பேசப்பட்டது. ஆனாலும் கூலி திரைப்படம் முதல் நாளிலேயே 151 கோடிகளை வசூலித்து தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்ற சாதனையை படைத்தது.
தொடர்ச்சியாகவே கூலி திரைப்படம் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனில் பட்டையை கிளப்பி வருகின்றது கூலி. இந்தப் படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆன ஹிருத்திக் ரோஷனின் வார் 2 படமும் வசூலில் பின்வாங்கியது.
இந்த நிலையில், கூலி திரைப்படம் முதல் நான்கு நாட்களில் இந்திய அளவில் மட்டும் 193. 25 கோடிகளை வசூலித்து இருப்பதாகவும் உலக அளவில் சுமார் 359 கோடிகளை வசூலித்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் நேற்றைய தினம் உலக அளவில் மட்டும் 63 கோடிகளையும், தமிழ் நாட்டில் 23 கோடிகளையும், ஆந்திரா தெலுங்கானாவில் 7.5 கோடிகளையும், கர்நாடகாவில் 41 லட்சமும், ஹிந்தியில் 5. 67 கோடிகளையும் வசூலித்துள்ளதாம்.
இவ்வாறு கூலி திரைப்படத்தின் இந்திய பாக்ஸ் ஆபீஸில் மட்டும் 200 கோடிகளை வசூலிக்கும் எனவும், உலக அளவில் 400 கோடிகளை எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
Listen News!