• Sep 08 2025

ரச்சிதாவின் போட்டோவால் எழுந்த பரபரப்பு.. வீட்டில என்ன தான் விசேஷம்? குழப்பத்தில் ரசிகர்கள்

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை ரச்சிதா மஹாலட்சுமி, தனது திறமையான நடிப்பு, மினுமினுக்கும் புன்னகையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். 'மீனாட்சி' என்ற கதாபாத்திரம் இவருக்கு தனி அடையாளமாக மாற, அதன் பிறகு வந்த வாய்ப்புகளும் அவரை இன்னும் பிரபலமாக்கின.


சின்னத்திரையில் உறுதியாக இடம் பிடித்திருந்த ரச்சிதா, பிக்பாஸ் சீசன் 6-இல் கலந்து கொண்டு தனது  நெச்சுரலான இயல்பை வெளிக்காட்டினார். பிக்பாஸ் முடிந்த பிறகு, ரச்சிதா சில நாட்கள் ஓய்வெடுத்து வந்தாலும், மீண்டும் திரைத்துறையில் 'Fire' என்ற படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். அந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 


இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரச்சிதா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெரும் ட்ரெண்டாகியுள்ளன. அவர் தனது வீட்டு ஊஞ்சலில் அமர்ந்தபடி கைகளை முழுவதும் மருதாணி கொண்டு அலங்கரித்திருக்கும் அந்த புகைப்படங்கள், ரசிகர்களிடையே விசேஷ ஆர்வத்தைக் கிளப்பி விட்டன. இதனைப் பார்த்த ரசிகர்களுக்கு "வீட்டில என்ன விசேஷம்?" என்ற கேள்வி எழுந்துள்ளது. 


Advertisement

Advertisement