• Jan 22 2025

குடும்பத்தோடு வீட்டை விட்டு ஓடும் சசிகுமார்! நகைச்சுவையான இலங்கை தமிழில் வெளியானது டீசர்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நடித்து வரும் அடுத்த புது திரைப்படத்தின் பெயர் டீசருடன் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தை குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


இப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக கனவு கன்னி சிம்ரன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கு  டூரிஸ்ட் ஃபேமிலி என்று பெயரிடப்பட்டுள்ளது. டீசரில் சசிகுமார்-சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

"d_i_a


தனது இரண்டு ஆண் பிள்ளைகளுடன் வாடகை வீட்டை விட்டு இரவோடு இரவாக சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போகும் குடும்பமாக இந்த டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்டுள்ளார். தற்போது வரையில் ரசிகர்களின் கவனத்தினை இந்த டீசர் ஈர்த்து வருகிறது. இதோ அந்த  சுவாரஷ்யமான அழகிய டீசர்

  


Advertisement

Advertisement