• Mar 14 2025

இரண்டே நாட்களில் வசூல் வேட்டையாடிய புஷ்பா 2.. வாயை பிளக்கும் கோலிவூட்..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவுடன் பகத் பாஸில் நடித்துள்ளார். இந்த படம் வெளியான முதல் நாளிலேயே 294 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு இந்த படத்தின் முதலாவது பாகம் வெளியானது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது இரண்டாவது பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

d_i_a

பான் இந்தியா அளவில் பல மொழிகளிலும் வெளியான புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் கொண்டாட்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும் வசூலில் இந்த படம் சாதிப்பதற்கு சற்றும் வாய்ப்பு இல்லை.


புஷ்பா படத்தின் முதலாவது காட்சியை பார்க்க வந்த பெண்  ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை அறிந்தால் அர்ஜுன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் கொடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது நாள் கலெக்ஷன் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி புஷ்பா 2 திரைப்படம் இரண்டாவது நாளில் சுமார் 400 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் 265 கோடிகளை வசூலித்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement