• Mar 14 2025

நடிகர் சூரிக்கு ஜோடியாகும் பொன்னியின் செல்வன் நடிகை..! அழகாய் வந்த அடுத்த அப்டேட்..

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் சூரி . நகைச்சுவைக்கு பெயர் போன இவர் நடித்த படங்களில் எல்லாம் ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டுதான் இருப்பார். இந்நிலையில் தற்போது வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி  தனது அபாரமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து ஹீரோவாகவும் ரசிகர் மனதினை வென்றார். 


விடுதலைக்கு பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். நடிகர் சூரி இறுதியாக விடுதலை 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். அது டிசம்பர் 20ம் திகதி ரிலீசாக இருக்கிறது.  


தற்போது இவரது அடுத்த படம் பற்றியும், அப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை பற்றியும் தகவல் கிடைத்திருக்கிறது. சூரியின் அடுத்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை ‘ஐஸ்வர்யா லட்சுமி’ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ‘ஐஸ்வர்யா லட்சுமி’ பொன்னியின் செல்வன் பாகம் 1,2 திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மயக்கி இருப்பார். அதனை அடுத்து கட்டா குஷுதி, ஜெயமே தந்திரம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement