• Feb 22 2025

வெளியாகியது “ கூலி” படப்பாடல் ; ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் பரிசு

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம் தான் கூலி.இப்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இப்படம் செப்டம்பர் 2023 இல் தலைவர் 171 என்ற தற்காலிகத் தலைப்பில் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடிக்கும் 171வது படமாக அறிவிக்கப்பட்டது மற்றும் அதிகாரப்பூர்வ தலைப்பு ஏப்ரல் 2024 இல் அறிவிக்கப்பட்டது.இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு மற்றும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படலானது இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் எதிர்பார்ப்பை உறுதி செய்யும் வகையில், லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று மாலை 6 மணி..." என குறிப்பிட்டிருந்தார்.எதிர்பார்த்தபடி, அந்த அப்டேட் வெளியாகியுள்ளது.


படக்குழு "Chikitu Vibe" என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டு, ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இப்பாடல் வெளியாகிய சில மணி நேரத்துக்குள் அதிகபட்ச பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன் ரசிகர்கள் பலரும் "74 வயதானாலும் சரி நூறு வயது ஆனாலும் சரி இவர் என்றும் சினிமாவில் பெரிய உச்சத்தில் தான் இருப்பார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்,அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்தர சூப்பர் ஸ்டார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா"என கமெண்ட் செய்து வருகின்றனர் .

Advertisement

Advertisement