• Jan 09 2026

காளிதாசின் காதல் திருமண வரவேற்று நிகழ்வு..! முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு..!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் காளிதாசின் காதல் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் குருவாயூர் கோயிலில் மிக எளிமையாக முறையில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 


காளிதாஸ் ஜெயராம் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் பாவ கதைகள், ராயன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் நீண்ட நாட்களாகவே தாரிணி என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில், காளிதாஸ் - தாரிணி தம்பதியினரின் திருமணம் டிசம்பர் 8ம் தேதி கேரளாவில் நடைபெற்றது.


அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் இந்நிலையில் இன்று பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகை தேவயானி, ஷாலினி அஜித்குமார் ,இயக்குனர் ரஞ்சித், அருண்விஜய், கவுண்டமணி, சிவகுமார், மணிரத்தினம் உட்பட பல நடிகை, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement

Advertisement