முன்னணி நடிகரான தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,இட்லிக்கடை போன்ற திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்துவருகின்றார்.இவரது விவாகரத்து சர்ச்சை சமீபத்தில் முடிவுற்ற நிலையில் இவர் தற்போது நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வொன்றிற்காக லண்டன் சென்றுள்ளார்.
லண்டன் கென்டன் கிளையில் தனுஷை சில்வர் ஸ்டார் நீரிழிவு மற்றும் சரவண பவன் அணி வரவேற்று கௌரவித்துள்ளது.குறித்த நிகழ்வில் கறுப்பு நிற காரில் வந்து இறங்கிய இவர் சிறுவர்களுக்கு அன்பு செலுத்தும் முகமாக ரசிகர்களின் உற்சாக குரலுக்கு மத்தியில், ஒரு சிறுமியின் கையை இறுக பிடித்து அன்புடன் முத்தமிட்டார், அதில் உள்ள நட்பும் அன்பும் அனைவரின் மனத்தையும் வென்றுள்ளது.மற்றும் குறித்த நிகழ்வில் தனுஷிற்கு மாலை அணிவித்து கௌரவித்ததுடன் அவரது பிறந்தநாள் இலக்கம் பதித்த ஒரு நீலக்கலர் ஜேர்சியினையும் பரிசளித்துள்ளனர்.
பொதுமக்களுடன் இருக்கும் இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் மிகுந்த பாராட்டுகளை பெற்றுவருகிறது.இந்த புகைப்படம் ரசிகர்களிடையே இப்போது வைரலாகி வருகிறது, மேலும் இவரின் எதிர்வரும் படங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளையும் கூட்டியுள்ளது.
Listen News!