• Jan 19 2025

பாக்கியாவுக்கு செல்வி எடுத்துக் கொடுத்த பாயிண்ட்.. ஆவேசத்தில் ஈஸ்வரி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், செல்வி பாக்யாவிடம் தனக்கு கோபி சார் மேலயும் புதுசா வந்த செப்  மேலேயும் தான் சந்தேகமா இருக்கு என்று சொல்லுகிறார். ஆனால் பாக்கியா அதை ஒத்துக் கொள்ளாமல் செல்ல, அமிர்தாவிடம் அதை சொல்லுகின்றார். ஆனால் அமிர்தாவும் தான் அப்படி யோசிக்கவில்லை என்று சொல்லுகின்றார்.

இதைத்தொடர்ந்து வீட்டில் இனியா கோபமாக இருப்பார் என்று நினைக்க, அவர் துள்ளிக் குதித்து டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுகிறார். அதன் பின்பு பாக்கியா  தான் ஆயுத பூஜைக்கு ஒரு ஐடியா வைத்திருப்பதாகவும் அதற்கு ஆர்டர் எடுக்க போகின்றேன் அதையும் நீங்கள் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று ஈஸ்வரியிடம்  சொல்லுகின்றார்.

d_i_a

இதை கேட்ட ஈஸ்வரி உனக்கு என்ன பைத்தியமா? ஏற்கனவே நான் சொன்னதை கேட்காமல் தான் இப்படி பெரிய பிரச்சினையில் மாட்டி இருக்கின்றாய். திரும்பவும் என்னை வைத்து எந்த காரியமும் செய்ய வேண்டாம் என பாக்யாவுக்கு திட்டி விட்டுச் செல்லுகின்றார். ஜெனியும் செல்வியும் இப்பதான் பிரச்சன முடிஞ்சது அதுக்குள்ள செய்யணுமா? கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்ல, அதை எல்லாம் சரி பண்ணுவேன் என்று பாக்கியா வைராக்கியமாக இருக்கின்றார்.


இன்னொரு பக்கம் எழிலை ப்ரொடியூசர் சந்தித்து விரைவில் பட பூஜையை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லுகின்றார். எழில் போன பிறகு கோபி அங்கு வர, பிள்ளைக்காக அவர் செய்து கொடுத்த காரியத்தை எண்ணி பாராட்டுகிறார். அதன் பின்பு கோபி இனியாவின் டான்ஸ் கிளாஸ்க்கு சென்று அங்கு இனியா டான்ஸ் ஆடுவதை பார்த்து ரசிக்கின்றார்.

இறுதியாக எழில் விரைவில் படத்திற்கான பூஜை ஆரம்பிக்க போவதை பற்றி பாக்கியாவிடம் சொல்லி மகிழ்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement