விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் அந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனம் உருக்கமான ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் இதுதான் அவருடைய இறுதி படம். மேலும் அரசியலில் நுழைந்துள்ள விஜய்க்கு வலு சேர்க்கும் படமாகவும் காணப்படுகிறது.
சமீபத்தில் மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இதன்போது தனது படத்திற்கு சும்மாவே பிரச்சினை வரும், இப்போது சொல்லவா வேண்டும். இந்த டைமில் இது சரியாகுமா என தயாரிப்பாளர்களை கேட்டதாகவும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த படத்தை எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார் விஜய்.

ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தாலும், அதற்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்திற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அதிகாரிகள் படத்தை பார்த்து விட்டதாகவும் அவர்கள் மாற்றங்களை செய்த பிறகும் தணிக்கை குழுவினர் சான்றிதழ் வழங்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
இந்த நிலையில், தணிக்கை குழு பிரச்சினை தீர்வுக்கு வராது என புரிந்து கொண்ட தயாரிப்பு நிறுவனம் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இதனால் அந்த படத்திற்கு ஆன்லைன் டிக்கெட் புக் செய்துள்ள நிலையில் அந்த படம் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!