சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக படத்தில் களமிறங்கியிருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் புரோமோஷன் பணிகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, "சிவகார்த்திகேயனும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்காரு. முகுந்த் இறந்துட்டார்னு செய்தி வந்ததும் அவரைப் பற்றி பார்க்கிறதுக்கு இந்த காணொளிதான் இருந்தது. முகுந்த் வரதராஜனுடைய கதாபாத்திரம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்துக்கு நடிகர்களுக்கான தேடல்ல இருக்கும்போது எல்லோருக்கும் சிவகார்த்திகேயன் பெயர்தான் நியாபகத்திற்கு வந்தது. இறுதி வேலைகளையெல்லாம் முடிச்சிட்டு படத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது சிவகார்த்திகேயன்தான் சரியான தேர்வுனு எனக்கு தோணுச்சு அக்டோபர் 23-ம் தேதி டெல்லியில ராணுவ வீரர்களுக்குப் படத்தை திரையிட்டோம்.
d_i_a
இந்த படத்துக்கு `அமரன்' என்கிற தலைப்பு சரியானதாக இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அந்த சொல்லுக்கு மரணமில்லாதவன்னு பொருள். டெல்லியில அமர் ஜவான் ஜோதினு ஒரு இடம் இருக்கு. மறைந்த ராணுவ வீரர்கள் நினைவாக அங்க விளக்கு ஏத்துறாங்க. `அமர் ஜவான்' என்றால் மறைந்த வீரன் என்று பொருள். அதுதான் சரியான தலைப்பு என தோன்றிய பிறகு பழைய படங்களின் தலைப்பைப் புதிய படத்தில் வைக்கிறதுக்குச் சில விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் பின்பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைப்பை வாங்கினோம்." எனப் பேசியிருக்கிறார்.
Listen News!