• Jan 08 2026

தந்தையின் மரணத்திற்கு பின் சமந்தா சென்ற முதல் இடம்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் நடிகை சமந்தா பிரபலமானவராக  காணப்பட்டாலும் இவருடைய வாழ்க்கையில் விவாகரத்து, நோய், தந்தையின் மரணம் என அடுத்தடுத்து பல அதிர்ச்சி சம்பவங்கள் இடம் பெற்றன. தற்போது அதிலிருந்து மீண்டு தன்னைத் தானே திடப் படுத்திக் கொண்ட ஒரு தைரியம் மிக்க பெண்ணாக சமந்தா காணப்படுகின்றார்.

தமிழில் வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இதை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்திருந்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் பிரபலமாக காணப்பட்டார்.

d_i_a

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கின் போது அதில் நடித்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். எனினும் இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. நான்கு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. நாக சைதன்யா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.


இன்னொரு பக்கம் அரிய வகை தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக பல ட்ரீட்மெண்ட் செய்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார். இதற்கிடையில் சமந்தாவின் தந்தை கடந்த மாதம் எதிர்பாராத விதத்தில் உயிரிழந்தார். 

இந்த நிலையில், தந்தை இறந்ததற்கு பிறகு சமந்தா மீண்டும் ஈஷாவுக்கு சென்றுள்ளார். அங்கு தனது விடுமுறைக்காக ஈஷாவுக்கு சென்றுள்ளதாக பதிவிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டா  வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement