ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் அஞ்சலி ,சமுத்திரக்கனி,ஸ்ரீகாந்த்,சுனில்,sj சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள sj சூர்யா அனைத்து மொழிகளிலும் தானே டப்பிங் கொடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது நடிப்பு அரக்கன் என பெயர் எடுத்து பெயருக்கு ஏற்றால் போல் தற்போது நெக்கட்டிவ் கதாபாத்திரங்களில் மிகவும் அருமையாக நடித்து வரும் இவர் இந்தி,தெலுங்கு மொழிகளிள் டப்பிங்க் பேச தீர்மானித்துள்ளார்.
மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற இப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளினை முடித்த கையோடு sj சூர்யா டப்பிங் வேலைகளை குறிப்பாக இந்தி டப்பிங் செய்ய தொடங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரிய கூட்டணி இணைந்துள்ள இப்படத்திற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Listen News!