• Jan 19 2025

கிரிமினல்ஸ்க்கு சப்போர்ட் பண்ணுவதே இயக்குனர் சங்கத்தின் வேலை! கண்டன அறிக்கைக்கு எதிராக சுசித்ரா

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் பாடகி சுசித்ரா. இவர் சமீபத்தில் youtube  சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மறைந்த  பாலச்சந்திரன் பெண்கள் விஷயத்தில் தவறான எண்ணம் கொண்டவர், சாகும் வரை அவர் காமம் பிடித்த ஆணாகவே காணப்பட்டார் என்று பேசியிருந்தார். இவர் கூறிய கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மறைந்த இயக்குனர் கே. பாலச்சந்திரன் பற்றி அவதூராக பேட்டி கொடுத்ததாக பாடகி சுசித்ராவிற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இயக்குனர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு திரைப்பட உலகில் சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனம் செய்வதும் யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளது.


தமிழ் திரை உலகில் என்றும் அளிக்க முடியாத புகழையும் திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்கக்கூடிய போற்றக்கூடிய மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் தான் இயக்குனர் கே. பாலச்சந்தர். இவர் தேசிய விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே போன்ற மிகப்பெரிய விருதுகளைப் பெற்று தமிழ் திரை உலகிற்கே பெருமை சேர்த்தவர்.

அவரின் புகழை கெடுக்கும் வண்ணம் தற்போது பாடகி சுசித்ரா, பாலச்சந்திரன் அவர்களை பற்றி அவதூராகவும் அவரின் புகழை கலங்கப்படுத்தும் விதமாகவும் ஒரு பேட்டி கொடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. யாரும் யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயல். இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும். இயக்குனர் சிகரம் பாலச்சந்திரன் அவர்களை பேட்டி என்ற பெயரில் அவரின் புகழை கலங்கப்படுத்திய பாடகி சுசித்ராவை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்து உள்ளது.

இதைத் தொடர்ந்து இயக்குனர் சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கை பற்றி தனது கருத்தை முன் வைத்துள்ளார் சுசித்ரா. அதன்படி தான் இயக்குனர் சங்கத்தின் மீது கண்டனத்தை தெரிவிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement