• Oct 13 2024

விஜய்யோட அரசியல் பத்தி கேட்டு உயிரை வாங்கறானுங்க...!! புலம்பும் சூப்பர் ஸ்டார்? கலாய்த்த பிரபலம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை விமர்சனம் செய்வதில் மட்டுமில்லாமல் நடிகர், இயக்குனர்கள் பற்றி கிண்டல் அடித்து விமர்சனம் செய்வதில் ப்ளூ சட்டை மாறன் முக்கிய இடத்தில் காணப்படுகின்றார். இவர் அளிக்கும் திரைப்பட  விமர்சனங்களுக்கு பலர் ரசிகர்களாக காணப்பட்டாலும், சில நேரங்களில் பலரின் வெறுப்பையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நேரடியாகவே சில பதிவுகளை பதிவிட்டு வருகின்றார் ப்ளூ சட்டை மாறன். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் காட்டமாக பதிலடி கொடுத்து வருகின்றார்கள்.

அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மறுபக்கம் விஜயின் முதலாவது மாநாடு பற்றிய ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என கோபத்துடன் பதில் அளித்து சென்றுள்ளார். தற்போது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


இதனை மையமாக வைத்து பேசிய ப்ளூ சட்டை மாறன், ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை சினிமா வாழ்க்கை குறித்து எல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றார். மேலும் விஜயால் அவரது நிம்மதி பறிபோனதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவரின் டுவிட்டர் பதிவுகள் வைரல் ஆகி வருகின்றன.

அவரின் ஒரு பதிவில் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து ஆல் ஸ்டுடென்ட் பத்தி பேசி கலவரத்தை உண்டாக்குவாராம். ஆனால் அரசியல் கேள்வி கேட்டால் மட்டும் கேட்க கூடாதாம். எந்தா சாரே இது நியாயம்? என கல்லாய்த்துள்ளார்.



Advertisement